Saturday, January 7, 2012

பாசமலர்


பாசமலர் படத்தை பார்த்து பலர் அழுததை கதை கதையாகக் கேட்டிருக்கின்றேன். ஆயினும், பாசமலரைப் பார்த்த போது எனக்கு மட்டு அழுகை வரவில்லை. இந்த இறுமாப்பில் இருந்த எனக்கு இடி விழுந்த கதையை பகிராவிட்டால் மண்டையே வெடித்துவிடும் போலுள்ளது.

மாமல்லனின் பதிவில் ( இடுகுறியும் குறியீடும் தற்குறியும் ) சோபாசக்தியின் தங்கை தர்மினிக்கும் மாமல்லனுக்கும் நடந்த உரையாடலைப் பார்த்து பாசமலர் படத்துக்கே அழதா எனக்கு அழுகை வந்துவிட்டது. நீண்டநேர அழுகையின் பின்னர் இந்தப்பதிவை எழுதுகின்றேன். இவ்வாறானதொரு ரத்தமும் சதையுமான உண்மைக் கதையைப் போய் நான் சந்தேகப்பட்டு விட்டேன் என்று நினைக்கும் போது உடலெல்லாம் பதறுகின்றது. 7 ஜென்மம் எடுத்தாலும் எனது பாவத்தைப் போக்கிக் கொள்ள முடியாது போலுள்ளதே..!!!


Tharmi Ni

எனக்கு (கப்டன்) இதைப் படித்ததிலிருந்து அப்பாவின் ஞாபகம். கவலை. பொலிஸ், புளொட், ஊராட்கள், நேவி, புலி என அடிவாங்கி உளவியல் தாக்கமுடையவராக இப்பவும் இந்தியாவிலிருக்கிறார். 6 மாதம் புலிகள் கொண்டு வைச்சிருந்து அடிச்சு விட்டாப் பிறகு அந்தக் கோபமெல்லாம் அடியாக எனக்கும் அம்மாவுக்கும் தான் விழுந்தது. உண்மையாகவே என் சங்கிலி வாங்கிக் கொண்டு ஒரு பானையில் சோறுடன் இந்தியா போறதாக வெளிக்கிட்டார். நாம் நம்பவில்லை. 13, 19 வயது பிள்ளைகள் அகதிகளாக படகில் இந்தியா போனது கவலை. ஒரே குடி. கோட்டை நோக்கி வந்த ஆமி பிடித்து 5 நாட்களாக வைத்திருந்து விடுவிக்கப்பட்டவர்களவர்கள் .படகில் வேட்டி கட்டி நெடுந்தீவடைந்து நயினாதீவு போய் பிறகு நேவியிடம் உளவாளி என அடிவாங்கி.புலிகளிடமும் நேவியின் உளவாளி என அடிவாங்கி (அப்ப 53 வயசு) புலிகளின் 6 மாத சிறைக்கு பிறகு வந்தும் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் பயப்பிடுவார். இப்பவும் யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை. இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறதாக சொல்வார். இது உண்மை. தனிப்பட உங்களுக்கு எழுதுகிறேன். நம்பகத்தன்மை பற்றிய உங்கள் கணிப்பு சரியெனச் சொல்ல இதை எழுதுகிறேன். இது அண்ணன் எழுதிய கதை. ஆகவே சாட்சியாயிருக்கும் நான் அமைதியாக கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் நுழைந்து கதையை இரசிப்பவர்களை குழப்ப விரும்பவில்லை. "நான் இயக்கத்திட்ட வாங்கின அடியெல்லாம் உங்களுக்குத் தருவன்" என எனக்கும் அம்மாவுக்கும் ஒரே அடி. இவர்கள் எழுதுவதால் எம் வாழ்விலும் இது போல பல சனங்களின் வாழ்விலும் நடந்தவைகள் இல்லெயென்றாகாது. இதிலே அண்ணன் முக்கிய சம்பவங்களை வைத்து கற்பனையை சேர்த்து எழுதினார். நம்பகத்தன்மை பற்றி இன்னும் உறுதியாக நீங்கள் எழுதலாம்.

விமலாதித்த மாமல்லன்

இதை என் தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி கிடைக்குமா? உங்கள் பெயர் வரவேண்டாம் எனில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஈழத்துப் பெண் என்று வெளியிட விரும்புகிறேன்.

Tharmi Ni

என் பெயரை வெளியிடுவது பற்றி பிரச்சனையில்லை. பெயர் இல்லாமல் வெளியிட இது என்ன இரகசியம். அல்லைப்பிட்டியில் எல்லோருக்கும் தெரிந்த கதை நம் கதை. தனிப்பட்ட ரீதியாக உங்களுக்கு அனுப்பிய மெஸேச் இது என்றும் என் அனுமதியுடன் வெளியிடப்படுகிறதெனவும் நீங்கள் குறிப்பிடலாம். என் அண்ணா ஷோபாசக்தியுடன் இது வெளியான பிறகு நான் இன்னும் கதைக்கவில்லை. அவர் இப்ப இந்தியாவில்.

விமலாதித்த மாமல்லன்

அப்படியெனில் தாங்கள் ஷோபா சக்தியின் உடன்பிறந்த சகோதரியா?

Tharmi Ni

அவர் பிறந்து 6 வருடங்களின் பின் பிறந்தவள்.

1 comment:

  1. ஓ! அப்பனுக்கு விழுந்த அடிகள்தான் சிறுகதைகளாக வருகின்றதா? நல்ல அரசியல்.

    // பொலிஸ், புளொட், ஊராட்கள், நேவி, புலி என அடிவாங்கி //
    பரிதாபப்பட வேண்டிய நிலமைதான். பொலிஸ், புளொட், நேவி, புலி என்றால் பரவாயில்லை. ஊராட்கள் ஏன் அடித்தார்கள்?

    எங்கள் ஊரில் இப்படி எல்லோரிடமும் அடிவாங்கியது ஒரே ஜீவன்தான். நாகரிகம் கருதி சொல்வதைத் தவிர்க்கின்றேன்.

    தகப்பனாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete