சோபாசக்தியின் 'கப்டன்' என்ற சிறுகதை கடந்த காலம் இதழில் பிரசுரமாகி இருந்தது. அதுமட்டுமல்லாது ஃபேஸ்புக் எங்கிலும் பரவலாக பரிமாறப்பட்டும் வருகின்றது.
அது கிடக்கட்டும்.
நம்ம மாமல்லன் அண்ணாச்சி கப்டன் கதை தொடர்பாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அப்பதிவின் பெயர் 'கும்பிடுறேன் ஷோபாசக்தி'. 'கிளாசிக்' என்றும் 'உலகத்தரம்' என்றும் அண்ணாச்சி பாராட்டியதைப் பார்த்து, அண்ணாச்சியே பாராட்டுகின்றாரே என்று கதையை வாசிக்கத் தொடங்கினேன்.
'ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன.' என்றவாறு சோபாசக்தி புனைவெழுதிச் செல்கின்றார்.
புலிகளின் ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக் கொண்டேயிருந்தன என்று என்று சோபாசக்தி அண்ணாச்சி எழுதுவதை வாசிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு நிச்சயமாக எம்.ஜி.ஆர் படங்களில் வரும் கோட்டைக் காட்சிகள் வந்து போயிருக்கும். இன்னும் சிலர் அதென்னது ஆட்லரி என்று மூக்கில் விரலை வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ ஏதோ சுவரில் ஓட்டை போடும் கருவியாக்கும் என்று நினைத்து கதையைத் தொடர்ந்திருப்பார்கள்.
அதென்னய்யா ஆட்லரி?
சோபாசக்தியின் கதை 1990 இல் நடக்கின்றது. அப்போதே ஆட்லரிகள் கோட்டை மதில்களில் ஓட்டைகளைப் போட்டுக்கொண்டேயிருந்தன என்று எழுதிச் செல்கின்றார் ஷோபாசக்தி. (கவனிக்க ஓட்டைகளைப் போட்டுக்கொண்டிருந்தன அல்ல 'போட்டுக் கொண்டேயிருந்தன'. எஸ். ரா இன் பாதிப்போ?)
1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போதே புலிகளால் இரண்டு ஆட்லரிகள் (நமது வட்டார வழக்கில் கூறப்படும் நெடுந்தூரப் பீரங்கிகள்) கைப்பற்றப்படுகின்றன. அதன் பின்னரே ஆட்லரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மட்டுப்படுத்தப்பட்ட கையேடுகளின் உதவியுடன் கேணல் ராஜு ஆட்லரிகள் இயங்குவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக 'வரலாறு' (7.10) கூறுகின்றது. இவ்விடயத்தை கொஞ்சம் ஊன்றிக் கேட்டால் எனது புனைவில் புலிகளிடம் தொண்ணூறிலேயே ஆட்லரி (அதாவது பீரங்கி) இருந்தது என்று ஷோபாசக்தி கூறுவார் என்பதில் யாருக்கும் சந்தேகமேயிருக்காது, அதுமட்டுமல்லாது தனது அடுத்த புனைவில் ஏவுகணையின் மூலம் புலிகள் 1983 ஆண்டில் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரைக் கொன்றதைத் தொடர்ந்து இலங்கையெங்கும் கலவரம் பரவியது என்று எழுதி, சகலதையும் கடந்து செல்லும் வல்லமை படைத்தவரல்லவா?
ஈழத்தமிழர்கள் சார்ந்த 'உலக இலக்கியத்தை' சோபாசக்தி படைக்கும் போது இவ்வாறான சிறிய தவறுகளை வாசகர்கள் கண்ண்டு கொள்ளக் கூடாதுதான். ஆயினும், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப எழுதும் போது நிச்சயமாக சில்லறை விடயங்களிலாவது புதினம் காட்ட வேண்டும். என்னதான் சத்தியவான் சாவித்திரி நாடகத்தை 100 தடவை பார்த்த - எம்.ஜி.ஆர் படத்தை 200 தடவை பார்த்த பரம்பரையில் நாம் வந்திருந்தாலும் இப்படிச் செய்யக்கூடாதப்பு.
மா மாமல்லன்
'பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்' என்ற பதிவை எழுதிய நம்ம மாமல்லன் அல்லைப்பிட்டிக்குப் பக்கத்தில நெடுந்தீவிலோ அல்லது வேலணையிலோ பிறந்திருந்தால், ஷோபாசக்தியின் கதையை வாசித்த கையோடு என்ன பதிவு எழுதியிருப்பார் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.
அது இதுதான்.
'ஷோபாசக்தி அடிச்ச ஆட்லரி'
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் நம்மில் பலருக்கு ஆட்லறியைப் பற்றி ஒரு பெரிய குழப்பமே இருக்கிறது. பெருசா குண்டு போட்டு அடிக்கிறது எல்லாமே ஆட்லறி தான் எடு நினைச்சுக்கொண்டிருக்கிரம். அதை நானும்கூட எனது தேநீர்க்கோப்பை (http://naanumorurasikai.blogspot.com/2011/11/blog-post_22.html) என்ற பதிவில் சொல்லியிருப்பேன். ஆட்லறி வரக்கு முன்னரே கேர்னல் ராஜுவின் தலைமையிலிருந்த பீரங்கிப்படையிடம் பசிலன் ௨௦௦௦ என்று பல சொந்தத் தயாரிப்புகளிருன்தது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. கோட்டைத்தாக்குதலில் பெரும்பான்மையாக பாவிக்கப்பட்டது இதுவே.
ReplyDeleteகுறை கண்டு பிடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் மட்டுமே இந்தப் பதிவு எழுதியதாகத் தெரிகிறது.
ReplyDeleteஎனக்கும் ஷோபா சக்தியின் விடுதலைப் புலிகள் நிலை மீதான மாற்றுக் கருத்து உண்டு.
ஆனால் இந்தக் கதை ' கப்டன்' அந்த சிந்தனையை எல்லாம் ஒதுக்கி வைக்கச் செய்து, வாசகனின் (எதிர் தரப்பு வாசகனின்) மூளைக்குள் அழகாகச் செல்கிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்று நிரூபணம் செய்து உள்ளார்.
என் பார்வையில் எனக்கு கப்டன் கதை, கடல் புரத்தில், தி ஜா கதைகள், கு அழகிரிசாமியின் அன்பளிப்பு போன்ற கதைகள் அளித்த மன நிறைவைத் தந்தது.
@ராம்ஜி_யாஹூ
ReplyDeleteஅதற்காகப் பிழையாகப் புனைவு செய்வதை ஏற்க வேண்டும் என்கின்றீர்களா?? ஆட்லறி புலிகளின் கையில் வந்தது 1996 இல் தான். கதைச் சுவைக்காக தவறாகச் சொல்லக் கூடாது. கேணல் ராயு அண்ணா பற்றிய தொகுப்பில் வந்த விபரம் நிமிடம் 7.16 விநாடிக்குப் பிறகு வருகின்றது. அது எவ்வளவு விடுதலைப்புலிகளுக்குப் புதிதாக இருந்தது தொடர்பாகவும் சொல்கின்றார்கள்.
http://www.youtube.com/watch?v=pdtdTxRwO9A
தன் புகழுக்காகத் தான் சோபா சக்தி இப்படியான பித்தலாட்டங்களைச் செய்வார். பிழையான வரலாறு அனுமதிப்பதே தவறு... ஆனால் நீங்கள் ஏற்கச் சொல்வதை என்னவென்று சொல்வது
This comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் வந்து கிண்டலாக ஒரு பின்னூட்டம் இட்டேன். கதையை வாசித்த பிற்பாடு... கோபமாக இருக்கிறது. இந்த 'கப்ரன்'களைப் பற்றி எழுதும் ஷோபா சக்தி ஏன் அந்த 'கப்ரன்'களைப் பற்றி எழுதுவதேயில்லை என்று நினைத்தேன். எந்தக் 'கப்ரன்'ஐப் பற்றி எழுதுவது என்பதெல்லாம் அவரவர் எழுத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் நிலைப்பாடு. எல்லாஞ் சரிதான். அந்தக் கதையைப் படித்துவிட்டு 'புனைவும் புண்ணாக்கும்...அருவருப்பாக இருக்கிறது'என்று சொல்ல எனக்குஞ் சுதந்திரம் உண்டல்லவா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅதே காலம் இதழில் ரஞ்சகுமார் எழுதிய கதையும் வந்திருக்கிறது. என்னுடைய சிறு வாசிப்பனுபவத்தில் வித்தியாசமான களம் கொண்டதாக இருந்தது அக்கதை. ஷோபாசக்தி எழுதிய முன்னைய கதைகள் எதற்கும் கப்டனுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை. புலி எதிர் இராணுவச் சித்திரவதைகளின் வர்ணிப்புக்களின் மூலம் அவர் செய்திருப்பது கேவலாமான பொய் அரசியல். அந்த அரசியலைத் தூக்கிப்பிடிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் ஷோபாசக்தி புராணம் ஷோபாவின் குசுவின் ஒலி, வாசம் போன்றவற்றுக்கு விளக்கம் சொல்வதில் போய் நிற்கும் என்பது என் நம்பிக்கை
ReplyDelete//பொன்ராசா அதைவிட அலட்டலாகப் பதில் சொல்வார். மண்ணில் படம் வரைந்து யாழ்ப்பாணத்தில் எந்த எந்த இடத்தில் புலிகளின் முகாம் இருக்கிறது, எங்கே புலிகளின் தலைவர் இருக்கக் கூடும், குறிப்பாகக் கடற்புலித் தளபதி சூசை இப்போது எங்கேயிருக்கக் கூடும் என்று கடற்படையினருக்குப் பொன்ராசா விளக்கினார்.//
ReplyDeleteகதையில் இன்னொரு தகவற்பிழை. சம்பவம் நடந்த காலப்பகுதியில் கடற்புலிகள் பிரிவு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. ஆகாய கடல்வெளி சமரின் பின்னரே கடற்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு கடற்புறா என்ற பெயரிலேயே ரு பிரிவு இருந்தது. ஆனாலும் அதற்கும் தளபதி சூசைக்கும் எத்தொடர்பும் இருக்கவில்லை. கதை நடக்கும் காலப்பகுதியில் தளபதி சூசை தீவகத்துக்கான பொறுப்பாளராக இருந்தார்.
இந்தக் கதை சுவாரசியமான ஒரு "கதை". இதனை உலக இலக்கியம் என்று சொல்பவர்களைப் பார்த்தீர்களானால் புரியும். அவர்களுக்கு இந்தக் கதையின் களம் புதியது. கோட்டை, சண்டை, ஆட்லறி இவையெல்லாவற்றையும் படிக்கிறபோது புதிய அனுபவம் பீறிட்டுக் கிளம்பத்தான் செய்யும். உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த கதைகளைப் படிக்கிற போது இருக்குமே.. அப்படியாக.. சோளகர் தொட்டி படித்தபோது இருந்ததே.. அப்படியாக..
ReplyDeleteஇப்படியான இலங்கை போர்ச் சூழல் அனுபவங்களை சொல்லுகிற கதைசொல்லிகள் இலங்கைச் சூழலில் பெரிதாக யாருமில்லை என்பதுவும் அவரது எழுத்துக்கள் ஜொலித்துத் தெரிவதற்கு காரணமாயிருக்கின்றன.
அண்ணன் கொண்டோடி சொன்னதுபோல - ஆனையிறவுச் சண்டையின் தோல்விக்குப் பிறகே கடற்புலிகளின் தேவை உணரப்பட்டு அப்படையணி கட்டப்பட்டது. அதற்கு முன்னர் கடற்புறாக்கள் - தனியே கடல்வழி விநியோக வழிகளை மட்டுமே பார்த்திருந்தார்கள்.
சரி விடுங்கள்.. புலிகளின் மல்ரிபரல்கள் (பல்குழல் பீரங்கிகள் - செக்கனுக்கு 16 முதல் 32 வரையான குண்டுகளை வீசவல்லது) கோட்டைச் சுவரைச் சல்லடையாக்கிக் கொண்டிருந்தன என அவர் எழுதாதையிட்டு சந்தோசப்படுவோம்.
முன்னர் அ.முத்துலிங்கம் ஒரு கதை எழுதியிருந்தார். அதுவும் கோட்டைச் சண்டையைப் பற்றியதுதான். அதில் பெண்போராளியொருத்தி கிரேனைட் கிளிப்பைக் கழட்டி 2 நிமிடங்கள் வைத்திருந்து எறிந்தாள் என்றேதோ வரும். பாவம் அவருக்கு இயக்கத்தையும் தெரியாது துவக்கையும் தெரியாது. கற்பனையில் எழுதிவிட்டார். இவருக்குமா..
கொழுவி,
ReplyDeleteஅ.முத்துலிங்கம் எழுதிய கதை இப்போதும் நினைவிருக்கிறது. அதிலே, 'அவள் கிளிப்பைக் கழற்றி குண்டை மேலே எறிந்துவிட்டு அக்குண்டு கீழே வரும்போது பிடித்து மீளவும் கிளிப்பை மாட்டிவிடுவாள். அவ்வளவு துணிச்சற்காரி' எண்டு எழுதியிருந்தார். ஏதோ கலைஞ்ச முடியைப் பிடிச்சுக் கிளிப்பை மாட்டிற மாதிரி அந்தாள் கதை சொல்லிக் கொண்டு போகுது. எட கூகிளிலை தட்டிப்பாத்தாலே ஒரு கையெறிகுண்டு எப்பிடித் தொழிற்படுது எண்டு பார்க்கலாம். சும்மா நாலு செக்கனுக்குப்பிறகு வெடிக்கும் எண்ட தகவலை வைச்சுக்கொண்டு (அதுகூட தமிழ்ச்சினிமா பாத்துத்தான் அ.மு. அறிஞ்சு வைச்சிருப்பார்) ஒரு கதையையே கட்டமைக்கிற கயமைத்தனத்தை என்ன சொல்ல? ஆனால் சோ.ச. முந்தி குண்டு தூக்கி அடிபட்ட காயெண்டபடியால் உப்பிடி அ.மு. மாதிரி லூசுத்தனமா எழுதமாட்டார். ஆள் றிவோல்வர் காலத்திலயே புரட்சிசெய்யப் புலமேகியதால இயக்கத்தையும் போராட்டத்தையும் பற்றி சரியான அப்டேட் இல்லாமல் அல்லற்படுறார். அவ்வளவுதான் பிரச்சனை.
ஆனா உந்த இந்திய இலக்கியவாதிகளுக்கும் வாசகனுகளுக்கும் உப்பிடியான கதையள் கிளுகிளுப்பாத்தான் இருக்கும். கிரனைற் எண்டா நாங்கள் கையெறிகுண்டு நினைப்பம், அவங்கள் கிரனைற் கல்லைத்தான் நினைப்பாங்கள்.
சோபாசக்தி, அ.முத்து போன்றவர்களுக்கு கொண்டோடியின்ர ஒரு அட்வைஸ் என்னெண்டா, நீங்கள் ஈழத்தாருக்கு ஒரு வேர்சனும், இருபது வருசத்துக்கு முந்திய புலம்பெயர்ந்த புலத்தாருக்கு ஒரு வேர்சனும் இந்தியாக்களுக்கு ஒரு வேர்சனும் எண்டு மூண்டு வேர்சனா எழுதினா நல்லது, எங்கட கிருத்திகன் குமாரசாமி முந்திச் செய்தமாதிரி;-).
உந்தக் கப்டன் கதையைக்கூட ஈழ வேர்சனில பசீலன் எண்டும், இந்திய வேர்சனில ஆட்லறி எண்டு எழுதியிருந்தா ஒரு பிரச்சினையுமில்லை.
எங்க நாங்கள் சொல்லிறைக் கேக்கிறாங்கள்?
This comment has been removed by the author.
ReplyDelete"கொழுவி said..."
ReplyDeleteyahooo........ கொழுவி back in action
FAN OF கொழுவி :)
அய்யா கொண்டோடி... ஏனய்யா ஏன்? அதுதான் பிழையெண்டு நான் ஒப்புக்கொண்டிட்டன்தானே. அதுக்குப் பிறகும் அடிச்சா அழுவன் ஓம்.. :))
ReplyDelete//...ஆள் றிவோல்வர் காலத்திலயே புரட்சிசெய்யப் புலமேகியதால இயக்கத்தையும் போராட்டத்தையும் பற்றி சரியான அப்டேட் இல்லாமல் அல்லற்படுறார். அவ்வளவுதான் பிரச்சனை..//
ReplyDeleteஇது முற்றிலும் உண்மை...அண்மையில் ஷோபா புலிகள் முற்றிலும் இந்து மத்தவர்களுக்கு சார்பானவர்கள் என்ற கருத்துப்பட தனது முகநூலில் தெரிவித்திருந்தார். அது தவறானது, மாறாக கிறீத்தவர் மீது சார்பாக இருப்பதாக அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். இவர் இதை ஏன் இப்படி முன்வைக்கிறார் என்றால், புலிகள் இந்துமத சார்பு...ஆகவே இசுலாமிய மதத்தினருக்கு எதிர்ப்பு என்ற ஒரு மாயையைக் கட்டமைக்கிறார். இது முற்றிலும் அயோக்கியத்தனமன்றி வேறல்ல....! புலிகளை எதிர்ப்பது, அவர்கள் மீது மாற்றுக் கருத்து கொண்டிருப்பது, அவர்களை விமர்சிப்பது வேறு...இந்த அடிப்படை நேர்மையற்ற அயோக்கியத்தனத்துக்கு இடமளிக்கக்கூடாது.
வரலாறுகளை திரிபுபடுத்தி அடுத்த தலைமுறைக்கு பிழையாகக் கடத்த முயலும் கயவர்களை இனங்கண்டு வேறுபடுத்த வேண்டும். தமக்கு இலக்கிய உலகில் இருக்கும் பெயரைக் கொண்டு தாம் எது சொன்னாலும் கேட்பார்கள் என்ற ஒரு வகைத் திமிர்ப் போக்கும், பிழை என்று சொன்னால், அதைப் பிழை என்று தெரிந்தும் ஏற்காமல் விதண்டாவாதம் புரிவோரோடு பேசுவதில் பயனில்லை.
இவர்கள் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவோரின் வேகத்தைத் தடுக்கும் முயற்சிகளிலேயே இருக்கிறார்கள். ஷோபா இன்று எல்லோராலும் ஓரங்கட்டப்படுவது போல இவரது தொண்டரடிப் பொடிகளும் விரைவில் ஓரங்கட்டப்படுவார்கள்...!!!!
இவருக்கு 1990 இன் பின்னர் அங்கு நடந்தவைகள் எல்லாம் இவர் செவிவழியாக கேட்டவைகளே....உண்மைகள் தெரியாது. அதுவும் புலி எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள் சொல்லும் தகவலை வைத்துக் கொண்டே இவர் (ஷோபா) பிழைப்பு நடாத்துகிறார். உண்மைகள் உறங்குவதில்லை. ஷோபா உங்கள் கடைகளில் இனிமேலும் வியாபாரம் நடக்காது. எல்லோரும் மிகத்தெளிவாகி விட்டார்கள்....!!!
ReplyDeleteதமிழீழ நீதிமன்றம், தமிழீழக் காவற்றுறை தொடர்பில் சோபாசக்தி ஒருமுறை உளறியிருந்தார் இப்படி.
ReplyDelete"தமிழீழ நீதிநிர்வாகச் சட்டங்களெல்லாம் மன்னர்காலத்துச் சட்டங்கள். குற்றவாளியைக் கழுமைமேல் ஏற்றி ஊர்வலம் போகவைக்கும் தண்டனைகளைக் கொண்டவை. இதைப்போய் ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்பாக உலகம் பார்க்கிறது' என்று அங்கலாய்த்திருந்தார். எவ்வளவு போக்கிரித்தனமான அவதூறு இது? உண்மையில் இதைவிடவும் வன்மமாகத்தான் அவர் அக்கட்டுரையில் தமிழீழ நீதிநிர்வாகத்தைப் பற்றி அவதூறைப் பரப்பியிருந்தார். முழுமையாக அவற்றை நினைவிலிருந்து மேற்கோளிட முடியவில்லை. அவருக்கு 90களின் பின்னர் என்ன நடந்ததென்று ஓர் இழவுமே தெரியாது.
மாமல்லன் விக்கிபீடியாவைத் துணைக்கழைத்து சோபாவின் தவறைச் சரிப்படுத்த முனைகிறார் என்று நினைக்கிறேன். முதலில் விக்கிபீடியாவின் இரண்டு கட்டுரைகளுமே தகவற்பிழைகளைக் கொண்டுள்ளன. கடற்புலிகள் அமைப்பு 1991 இலேயே உருவாக்கப்பட்டது. விக்கிபீடியா சொல்வது போல் 1984 இல் அன்று. அடுத்து தளபதி சூசை கடற்புலிகள் அமைப்புத் தொடங்கப்பட்ட பிற்பாடே அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்ட்டார். முதலும் கடைசியுமாக அவர்மட்டுமே கடற்புலிகள் அமைப்பின் ஒட்டுமொத்தப் பொறுப்பாக இருந்தார். கங்கை அமரன் அவர்கள் எக்காலத்திலும் கடற்புலிகள் அமைப்பின் பொறுப்பாக இருந்ததில்லை.
ReplyDeleteவிடுதலைப்புலிகளின் படைக்கட்டமைப்புக்கள் பற்றித் தெரியாதவர்கள், சிறப்புத் தளபதி, தளபதி, துணைத்தளபதி போன்ற நிலைகளை விளங்கிக் கொள்வதில்லை. அவ்வகையிலேயே 'கடற்புலிகளின் தளபதி கங்கை அமரன்' என்பதை அவரே கடற்புலிகளுக்கு உயர்பொறுப்பாளர் என நினைத்து விக்கிபீடியாக் கட்டுரையை எழுதியுள்ளனர் என நினைக்கிறேன். சிறப்புத்தளபதியின் அடுத்தநிலைப் பொறுப்பாளர்தான் தளபதி, பின் துணைத்தளபதி என்று கட்டமைப்பு விரியும்.
கடைசியாக, சோ.ச. கூட விக்கிபீடியா பார்த்துத்தான் ஈழப்போராட்டத்தை விளங்கிக்கொள்கிறார் என்றா மாமல்லன் நிறுவ முயல்கிறார்?
http://www.maamallan.com/2011/12/blog-post_13.html
ஃஃ.1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கடற்புலிகள் அமைப்பின் விசேட கடற்புலிகளின் கட்டளை அதிகாரியாக இருந்தார். அச்சமயம் கடற்புலிகளின் தலைவராக பணியாறிய "கங்கை அமரன்" இலங்கைக் கடற்படையினருடனான சண்டையின் போது கொல்லப்பட்டதை அடுத்து தலைமைப் பொறுப்பு சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஃஃ
ReplyDeleteஇது விக்கிபீடியா. கங்கை அமரன் வீரச்சாவடைந்தது கடற்படையினருடனான சண்டைபின்போதன்று. வன்னியில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் அணியின் (ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலே இதுதான்) தாக்குதலில். நடந்தது 2001 ஆம் ஆண்டில்.
மாமல்லன் துணைக்கழைத்த இரண்டு விக்கிபீடியாக் கட்டுரைகளுமே ஒன்றுக்கொன்று முரணானவை. ஒன்று 1984 இல் கடற்புலிகள் அமைப்புத் தொடங்கப்பட்டதென்கிறது. மற்றது 1991 இல் தொடங்கப்பட்டதென்கிறது.
ReplyDeleteஇப்போதுதான் முகப்புப்புத்தக விவாதம் பார்த்தேன். எனக்குக் கணக்கில்லாததல் அதிற் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் எனது கருத்துக்களை சசீவன் அங்கிடுவதால் நானும் அவ்விவாதத்திற் கலந்துகொள்பவனாகிறேன்.
ReplyDeleteமுதலில் கொண்டோடி பற்றி சசீவன் எங்குப் புலனாய்ந்தார் என்று தெரியவில்லை, கருத்துக்கூற ஒன்றுமில்லை.
ஆனால் நான் சொன்ன தகவல்கள் வன்னியில் வாழ்ந்த சராசரித் தமிழனுக்கே நன்கு தெரிந்தவை. இதற்கேன் 86 வரை போராடியவர்களைக் கேட்க வேணும்? விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட ஏராளமான ஆவணங்கள் இன்னமும் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் ஏடுகள் http://www.viduthalaipulikal.net/ என்ற தளத்தில் பத்திரிகை என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றன. அவற்றில் தேடினால் அனைத்தும் விலாவாரியாக இருக்கும்.
முதலில் விக்கிபீடியாக் கட்டுரைகளைச் செப்பனிட வேண்டும். இவ்வளவு வரலாற்றுப் பிழைகளோடு அவை இருப்பது நன்றன்று. எம்போன்றவர்கள் பங்களிக்காமல் ஒதுங்கிநின்று விமர்சிப்பது தவறென்பது உண்மையே.
ReplyDeleteமாமல்லன் சோ.சக்திக்கு வக்காலத்து வாங்குவதற்காக அடிப்படை விடயங்களையே புறந்தள்ளி குழந்தைபோல் சண்டைபிடிக்கிறாரென்றே நினைக்கிறேன்.
---------------
தளபதி சூசை அந்நேரத்தில் தீவகத்துக்கான பொறுப்பாளராகவே இருந்தாரென்பதை சோபாசக்திகூட இந்நேரம் விளங்கியிருப்பார். இல்லாவிட்டால் கவிஞர் நிலாந்தனிடம்கூடக் கேட்டுப் பார்க்கலாமே?;-)
கங்கை அமரன் பற்றிச் சொல்ல இவர்களே விரும்பும் விக்கிபீடியாவையே தருகிறேன். அதிஷ்டவசமாக இதில் சரியான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ;-)
ReplyDeletehttp://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு
ReplyDeleteஇப்போது தான் பார்த்தேன் "ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு" என்று மாமல்லன் ஓரிகை எழுதியுள்ளார். கிளிப்பைக் கழற்றிக் குண்டையெறிந்து மீளப்பூட்டும் கதையை அப்போதே நாங்கள் நக்கலடித்ததுபோன்றே மாமல்லனும் திட்டித்தீர்த்திருக்கிறார்.
ReplyDeleteமாமல்லன்: ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு: ஆவியில் அமுட்டு வீசிய இலக்கிய குண்டு
எட, சோபாசக்தியின் கதைக்குமட்டுமேன் இந்தாள் இப்பிடி வக்காலத்து வாங்குது? அதிலயும் அமுட்டு விட்ட ஓட்டைகள் போல கன ஓட்டைகள் இருக்குத்தானே?
=================
அதுசரி, சசீவன், உங்கடபாட்டுக்கு கொண்டோடி பற்றி வர்ணணைகள் குடுக்கிறியள்? உந்த வர்ணனைகள்தான் என்ர கருத்துக்குப் பலம் சேர்க்குமென்றில்லை. கையெறிகுண்டு நுட்பம் பற்றிச் சொல்ல யாரும் இயக்கத்தில் இருந்திருக்க வேண்டியதில்லை. அட! மாமல்லன் என்ன புலிகள் இயக்கத்தில் இருந்தாரா என்ன? அதைவிட, நீங்கள் என்னைப்பற்றிச் சொல்பவை பல உண்மையுமல்ல. அனேகமாக கொண்டோடியின் இறுதிப்பின்னூட்டமாகவும் இது இருக்கலாம்.
உண்மையில் 1990 களில் யாழ் கோட்டையில் பதம் பார்த்துக்கொண்டிருந்தது பசீலன் 2000 எறிகணைகளே, 1987-1989 களில் இந்தியராணுவத்துடன் சண்டையின் போது வன்னிக்காட்டுக்குள் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு மேலதிகரியாக நின்று இந்திய ராணுவத்தினரை வன்னிக்காட்டுக்குள் தலைவர் பிரபாகரனை நெருங்கவிடாமல் ஆக்ரோசமாக வீரமாக போரிட்டு வீரச்சாவடைந்தவர் மேஜர் பசீலன்.அவரின் நினைவாகவே அந்த எறிகணையை புலிகள் உள்ளூரில் கிடைத்த மூலப்பொருட்களைக்கொண்டு தயாரித்திருந்தனர்.டிராடரில் வைத்துத்தான் அதனை ஏவ முடியும், அது வெடித்தால் அருகே உள்ள ரானுவவீரர்களின் செவிப்பறை வெடிக்குமலவு சத்தமும், உடல் எங்கும் எரிகாயுமும் ஏற்படுமளவுக்கு அதனை தயாரித்து கோட்டை,ஆனையிறவுத்தளம் மீதான் ஆகய கடல் வெளி சம்ர் 1991 இல் பாவித்து பல வெற்றிகளுக்கு வழிகோலியிருந்தனர் என்பதே உண்மை,ஆட்லறி 130 MM இலிருந்து 150 MM வரை 1996 இன் பின்பே முல்லைத்தீவு புளூக்குணாவை முகாம் தாக்குதலின் பின்பு கைப்பற்றியும் வெளிநாடுகளில் இருந்தும் தருவித்தே எதிரிக்கு எதிராக பாவித்தனர்
ReplyDelete